Friday, July 13, 2007

ஊடகங்களின் அலட்சியம்

உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுக்கப் புறப்பட்ட ஒரு வெளிநாட்டுக் கம்பெனி பல கோடிகளை பொதுமக்களிடமிருந்து சுருட்டியிருக்கிறது. அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு பணம் செலவு செய்து ஓட்டளிக்கத்தூண்டியதில் ஊடகங்களின் பங்கே முதன்மையானது. ஆனால் இப்போது ஓட்டளித்த பொதுமககளை முட்டாள்கள் என்று ஊடகங்கள் கூறிவருகின்றன. (உம். இந்த வார ஆனந்த விகடன்) முடிவுகள் வெளிவரும் வரை கமுக்கமாக இருந்துவிட்டு இப்போது மக்களை குறைகூறுவது சரியல்ல. சரியான தகவல்களை சரியான நேரத்தில் வெளியிடுவதே ஊடகங்களின் கடமையாகும். முன்கூட்டியே அந்த கம்பெனி பற்றிய விவரங்களை வெளியிடாத்தற்கு ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

1 comment:

ram said...

oodakangalukku panam enbathu mukkiya kurikkoL. eppothume kudirai Odiyapin layathhthai adaikka advice seivathu evarkal paNi.utharanamaka munbu finance companykaL adhika vatti thruvathaka makkalai ematrikk kondu iruntha pothu oru munnani pathirikai kooda athaip patriya unMaiyai Arainthu ezhutha villai.avargal odippona pinthan parparppu cheithiyaga veliyittu panam parthana oodagangaL