Tuesday, March 20, 2007

கிரிக்கெட்

எங்கே பார்த்தாலும் கிரிக்கெட் மேனியா பிடிச்சு ஆட்டுது. சேவாக் பயல் பார்முக்கு வந்துட்டானா, கங்குலிக்கு கேப்டன்ஷிப் குடுக்கலாமா, டோனியத் தூககலாமன்னு ஒரே களேபரம்தான். சிறுசிலிருந்து பெறுசு வரை எல்லாம் டிவி பெட்டியே கதின்னு கெடக்குறாங்க. அவங்க பீல்டுல ஆடுரத விட இடையில போடர விளம்பரத்துலதான் நல்லா துடிப்பா நடிக்குறாங்க. அவங்க ஒரு four அடிச்சா ஒரு காசு, six அடிச்சா ஒரு காசு, செஞ்சுரி அடிச்சா வீடே தர்ராங்கலாம். ஒவ்வொரு வீரரும் ஏதாவது பன்னாட்டு கம்பெனியோட “ப்ரண்ட் அம்பாசடரா” இருக்கறாங்க அவங்களுக்கு தோத்தாலும் ஜெயிச்சாலும் காசுதான்.

இப்போ இந்தியா சூபர் 8 க்கு போகுமா போகாதாங்கரதுல ரசிகர்கள விட விளம்பரதாரர்களே அதிகம் கவலையோட இருக்காங்க. ஏன்னா இந்தியா லீக் ஆட்டத்தோட வெளியேரினா அவங்க விளம்பரத்த பாக்குரவங்க எண்ணிக்கை இங்கே கம்மியாயிடுமே. மீடியாககள் கிரிக்கெட்டை போற்றி வளர்ககக் காரணமே விளம்பரம் போடுறதுக்கான நேரம் அதில் அதிகம்கறதுதானே.

இந்த களேபரத்தில் நம்ம பசங்களோட பரிச்சையையும் கொஞ்சம் நெனச்சுப்பாருங்க. பத்தாவது பன்னிரண்டாவது இந்த சீசன்லதான் நடக்குது.

No comments: